இல்லம் > Uncategorized > 554எங்கேயும் எப்போதும்

554எங்கேயும் எப்போதும்

தீபாவளி திருநாளில் அதிகபட்ச எல்லா தொலைக் காட்சி சிறப்பு காட்சிகளில் “பொல்லாதவன்” படத்தின் எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ் காட்சிகள் எப்படி படமாக்கினார்கள் என்று போட்டு போட்டு தாக்கிவிட்டார்கள். அந்த படத்தில் பல பாடல்கள் இருக்கும் போது. இந்த பாடலை பற்றி தான் அதிகம் விவரித்து ஒளிப்பரப்பினார்கள். அந்த தாக்கம் இன்னும் என்னை விட்டுப்போகவில்லை. அங்கில தளத்தில் சென்ற வாரம் பதிவு செய்தேன். இருந்தாலும் தமிழில் வழங்க வேண்டும் என ஆசையாய் இருந்தது. இக்கால இளசுகளை சுண்டி இழுக்கும் வகையில் திரு. யோகி அவர்கள் இசையமைத்து கலக்கியிருக்கிறார். அவர் இசையமைப்புக்கு யுகபாரதி தன் வரிகள் நல்ல பொருத்தமாக அமைந்துள்ளது. பாலுஜி அதே கவிஞர் கண்ணதாசன் வரிகளை பாடியுள்ளார். அதே பழைய பாடலை போன்றெ என்னவொரு எனர்ஜி. அப்பப்பா குறிப்பாக இந்த இரண்டு பாடல்களிலும் வரும் அந்த “ரர்ர்ராராரா.. ஹெ.ஹெ..ஹே… ஹோஓஓஓஓஓஓஒ” சூப்பர் போங்க. பழைய பாடலில் வரும் அந்த பாம்பின் மகுடி இசையை இந்த ரீமிக்ஸில் முதலிலேயே அமைத்தது அமர்க்களமாக இருக்கிறது. இதுவும் கேட்க ஒரு வித்தியாசமாகத்தான் இருக்குங்க. பாலுஜி இந்த பாடலில் தன் பங்கை நூறு சதவீதம் சரியாக செய்துள்ளார்.

படம்: பொல்லாதவன்
பாடியவர்கள்: பாலுஜி, யோகி, சுனிதா சாரதி
பாடலாசிரியர்: கவியரசு கண்ணதாசன், யுகபாரதி

http://res0.esnips.com/escentral/images/widgets/flash/player_dj.swf
Engeyum Epothum-Po…

கமல் இடுப்புக்குமேல் பட்டா பெல்ட் போட்டு இன் செய்த வெள்ளை முழு நீள பெல்பாட்டம் பேண்டில் வெள்ளை நிற காலரின் ஓரத்தில் பூப்பூவாக டிசனைல் முழுக்கை சட்டையை அணிந்து கொண்டு அந்த ட்ரம்பட் இசைக்கருவியை ஒயிலாக வாசித்திக்கொண்டே ஒரு பக்கவாட்டில் ஹிப்பி முடியுடன் ஒரு போஸ் கொடுத்த அட்டகாசமான நினைத்தாலே இனிக்கும் பாடல் காட்சி எங்கேயும் எப்போதும் பாடலைப் பாடும் போது எடுத்தது அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியுமா? அந்த அமர்க்களமான பாடலை இத்தனை நாள் கழித்து பதிவு செய்ய முக்கிய காரணம். சமீபத்திய திரைக்கு வரப்போகும் பொல்லாதவன் படத்தில் பாலுஜி திரும்பவும் அதே பாடல் வரிகளூடன் பாடியுள்ளார். இந்த புதிய ரீமிக்ஸ் பாடலிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட பகுதியை தன் பாணியிலேயே அதே உற்சாகத்துடன் பாடியிருப்பது பாராட்டபட வேண்டிய ஒன்று. இந்த கால இளைஞர்களூக்காக இசையமைக்கப் பட்ட பாடல். மலேசிய பாப் பாடகர் யோகி அவர்களின் இசையமைப்பில் இந்த ரீமிக்ஸ் பாடல் ஆட்டம் போட வைக்கும். துவக்கத்திலே பாடலில் வரும் அந்த மகுடியின் இசைக்கும் வார்த்தைகளைப் போட்டு கல கலக்கவைக்கிறார் இசையமைப்பாளர். பாடலை கேட்டு தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளையும் தெரிவியுங்கள்.

படம்:நினைத்தாலே இனிக்கும்
பாடியவர்: பாலுஜி
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ….ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

காலம் சல்லாபக் காலம் ஓ உலகம் உல்லாசக் கோலம்
இளமை ரத்தங்கள் ஊரும் ஹ உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்பமயம்

தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயர பறந்து கொண்டாடுவோம்

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ….ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

காலை ஜப்பானில் காபி மாலை நியுயார்க்கில் காபரே
இரவில் தாய்லாந்தில் ஜாலி இனிமேல் நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம் உலகம்

உலகம் நமது பாக்கெட்டிலே வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
இரவு பொழுது நமதுப்பக்க்கம் விடிய விடிய கொண்டாடுவோம்

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ….ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

ஆடை இல்லாத மேனி ஓ அவன் பேர் அந்நாளில் ஞானி
இன்றோ அது ஒரு ஹாபி ஹொ எல்லோரும் இனிமேல் பேபி
வெட்கம் துக்கம் தேவையில்லை

தட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டும் கமான் எவ்ரபடி
தாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும் ஜாயின் மீ ஹா
ஹோ ஹோ ஹா ஹா
தட்டட்டும் தட்டட்டும் கைகள் இரண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் இரண்டும
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை

கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை
ராராரீஈஈஈஈஈஈஈ….ஹோஓஓஓஓஓஓஒ..ஓ

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்

கமான் எவ்ரபடி ஜாயின் டுகெதர்
ஹ .. ஹ .. ஹ.. ஹ
ஹ .. ஹ .. ஹ.. ஹ
ஹ .. ஹ .. ஹ.. ஹ

http://res0.esnips.com/escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA
Advertisements
பிரிவுகள்:Uncategorized
 1. 5:15 பிப இல் நவம்பர் 17, 2007

  ரீமிக்சைக் கேட்டுவிட்டு மெல்லிசை மன்னர் கோவப்பட்டாராம். 😦

 2. 9:33 பிப இல் நவம்பர் 18, 2007

  Original- HeavenRe-mix- Hell

 3. 10:27 பிப இல் நவம்பர் 18, 2007

  //மலேசிய பாப் பாடகர் யோகி அவர்களின் இசையமைப்பில் இந்த ரீமிக்ஸ் பாடல் ஆட்டம் போட வைக்கும்//ராப் பகுதி பாடியது தான் யோகி, இசை ஜீ.வி.பிரகாஷ் தானே!

 4. 9:08 முப இல் நவம்பர் 19, 2007

  ராகவன் சார்..//ரீமிக்சைக் கேட்டுவிட்டு மெல்லிசை மன்னர் கோவப்பட்டாராம்//இருக்கலாம். சந்தத்துக்கு சொந்தக்காரர் ஆயிற்றே ராகவன் சார்.இளா சார். வருகைக்கு நன்றி.வவ்வால் சார்,//ராப் பகுதி பாடியது தான் யோகி, இசை ஜீ.வி.பிரகாஷ் தானே!//இசை ஜி.வி.ப்ராகாஷ் தான் ஆனால் ரீமிக்ஸ் பாடல் முழுவது யோகியின் படைப்பு. இருந்தாலும் மூலாதரார சந்தம் மெல்லிசை மன்னரோடது சார்.என்னதான் இருக்கட்டும் பாலுஜியின் அந்த //ரராஆஆஆஆஆஆ…ஹேஏஏஏஏஎ… ஹோஓஓஓஓ// இன்னும் மனசு விட்டு போகமாட்டீங்குது சார். தினமும் இங்கு சின்னத்திரை ஏதாவது ஒரு சேனலிலும், அல்லது எப்.எமிலும் ஒரு தடவையாவது ஒலி, ஒளிப்பரப்பாகமல் இருக்க மாட்டார்கள்.

 5. 7:32 பிப இல் நவம்பர் 19, 2007

  //இசை ஜி.வி.ப்ராகாஷ் தான் ஆனால் ரீமிக்ஸ் பாடல் முழுவது யோகியின் படைப்பு. இருந்தாலும் மூலாதரார சந்தம் மெல்லிசை மன்னரோடது சார்.//என்ன இப்படி இருக்கிங்க, நீங்களே எத்தனை இசைப்பதிவுகள் போட்டு இருக்கிங்க , நான் சொன்னது என்னனு புரியலையா என்ன,மூல இசை எம்.எஸ்.வி இல்லை என்றா சொன்னேன், அவரோடதுனு மழலைக்கு கூட தெரியுமே, நான் சொன்னது ரிமிக்ஸ் இசையை போட்டது ஜீ.வி.பிரகாஷ் தானே என்று, அல்லது அந்த பாடலுக்கு மட்டும் யோகியே போட்டுக்கொண்டாரா? படைப்பு முழுவதும் யோகிக்கு சொந்தம் என்றால் , ரீ மிக்ஸ், இசையமைப்பும் அவருக்கு தான் சொந்தமா? எனக்கு தெரிந்து அப்படி சொல்லப்படவில்லை அதான் சந்தேகமாக கேட்டுள்ளேன், நான் ஒன்று கேட்டால் நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள்.யோகி குழுவினர் வல்லவன் என்ற பெயரில் ஆல்பம் போட்டு தான் மலேசியாவில் புகழ் பெற்றார்கள் , என விகடனில் படித்தேன்.

 6. 3:26 முப இல் நவம்பர் 22, 2007

  வவ்வால் சார்,//நான் சொன்னது ரிமிக்ஸ் இசையை போட்டது ஜீ.வி.பிரகாஷ் தானே என்று, அல்லது அந்த பாடலுக்கு மட்டும் யோகியே போட்டுக்கொண்டாரா? படைப்பு முழுவதும் யோகிக்கு சொந்தம் என்றால் , ரீ மிக்ஸ், இசையமைப்பும் அவருக்கு தான் சொந்தமா? எனக்கு தெரிந்து அப்படி சொல்லப்படவில்லை அதான் சந்தேகமாக கேட்டுள்ளேன், நான் ஒன்று கேட்டால் நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள்.//ஒரு தினசரரி நாளிதழில் இசையமைப்பாளர் திரு.ஜி,வி.பிரகாஷ் ஒரு பேட்டியில் சொன்னதை தான் இங்கு நான் குறிப்பிட்டேன். அந்த ஆதாரத்தை தேடி தங்களூக்கு அனுப்புகிறேன் கொஞ்சம் டைம் கொடுங்க சார்.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: