இல்லம் > பாலு, மோகன், ஷைலஜா > 626மலர்களே இதோ இதோ

626மலர்களே இதோ இதோ

Photobucket

இன்று அதிகாலை சூரியன் எப்.எம் ரேடியோவில் நமது பாலுஜி ரசிகர்களூக்காக பாடல் ஒலிபரப்பசொல்லலாம் என எஸ்.எம்.எஸில் ஒரு பாடல் கேட்டேன் எஸ்.பி.பி ரசிகர் ஆர்.ஜே. திரு. ரவிவர்மா அவர்கள் என் எஸ்.எம்.எஸ் படித்து “மலர்களே இதோ இதோ” என்ற இந்த பாடல் ஒலிபரப்பினார். அதன் பேசிய ஒலிபரப்பின் சிறிய ஒலிகோப்பு இதோ.. கேட்கும் முன் திரு.ரவிவர்மா அவர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும். பல நாட்களாக அதிகாலையில் நான் கேட்டு வரும் ஒலிபரப்பு. அவர் அடிக்கடி பாலுஜியின் “எப்போதோ கேட்ட ஞாபகம்” என்றும் ” காலத்தால் மறைந்து போனா பாடல்” என்ற தலைப்பில் அடிக்கடி ஒலிபரப்புவார் பாடும் நிலா பாலுவில் அறிதான பாடல்கள் அவர் ஒலிபரப்பி நான் குறிப்பெடுத்து பதிவு செய்த பாடல்கள். நமக்காக நிறைய அறிதான பாடலகள் ஒலிபரப்பியுள்ளார். அவருக்கு பாலுஜி சார்ப்பாகவும் அகில உலக பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் இதயங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

நான் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை என்ற ஒரு கலக்கலான பாடல் பாலுஜி மிக அற்புதமாக பாடியிருப்பார். அந்த பாடல் தான் பதியலாம் என்று இருந்தேன். அதற்க்குள் இந்த மெலோடி பாடலை தங்களூக்கு வழங்கலாம் என்று நினைத்தேன். ஏனென்றால் இந்த பாடல் அதிகம் கேட்க முடியாத பாடல் நானே ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நாள் கழித்து தான் கேட்டேன் என்னவொரு இனிமை. இந்த பாடலை ஆங்கில தளத்தில் திரு. தாசரதி பதிந்திருக்கிறார் அதனால் என்னங்க மறுமுறை கேட்டுடுங்களேன் இல்லைன்னா எனக்கு தூக்கம் வராது. சரிங்களா? அனுபவியுங்கள் தோழர்களே….

படம்: தீராத விளையாட்டுப் பிள்ளை
பாடியவர்கள்: பாலுஜி, எஸ்.பி.ஷைலஜா
இசை: சங்கர் கனேஷ்
நடிகர்கள்: மைக் மோகன், பூர்னிமா

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

லலலல லா லா லா
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ
மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

செவ்வானிலே பன்னீரிலே
வென்மேகம் மாகோலம் போடும்
செவ்வானிலே பன்னீரிலே
வென்மேகம் மாக்கோலம் போடும்
நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது
அன்போடு வரவேற்கவே
அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில்
சங்கீதம் தாலாட்டுமோஓஓ

மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
ஆஆமூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
இளமாலையில் மலர்மேடையில்
பொண்வண்டின் நாதஸ்வரம்
எங்கள் கல்யாண நாள்
இன்று வேதங்களும் தேர் கூட்டி போகின்றன

மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

லலலல ஹ லலலல லா லா லா

Advertisements
பிரிவுகள்:பாலு, மோகன், ஷைலஜா
  1. 7:26 முப இல் நவம்பர் 16, 2009

    Dear Sundar Sir,What a Sankar Ganesh`s melodious song from Brother & Sister combination. Thank you.Best regards….Kannan9739020131subhikanna@yahoo.co.in

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: