இல்லம் > Balu, Deva, Vijay > 651மணிமேகலையே மணியாகலையே

651மணிமேகலையே மணியாகலையே

இளையதளபதி நடித்த படம் “காலமெல்லாம் காத்திருப்பேன்” நடிக்க ஆரம்பித்த சமயத்தில் வந்ததால் இந்த படத்தை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை ஏன் நான் கூட பார்த்ததில்லை இந்த மாதிரி படங்களில் எப்படியாவது பாடல்கள் ஹிட் செய்து விடவேண்டுமென்று பாலுஜி போல் பிரபல பாடகர்களை வைத்து பாட்டுக்களை பாடவைச்சுடறாங்க. அதனால இந்த மாதிரியான அழகான மெலோடி பாடல்கள் பிரபலமாகமலே போய்விடுகிறது. எவ்வளவு அழகான மெட்டுடன் தேனிசை தென்றலார் தேவா அவர்கள் தந்துருக்காங்க கேளுங்க. பாடல்வரிகள் யாருன்னு தெரியல மனதை கொள்ளை கொண்டு போகுது குறிப்பாக இந்த வரிகள்
// நெற்றி பொட்ட மட்டும் வச்சி தங்கநகை இல்லாமலே, கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா, சொந்தம் பந்தமே அன்புதானம்மா அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து
நீ என்னைக்கட்டி போட்டிருக்கே கண்ணுக்குள்ளே//

மேலும் // தென்றல் வருமா சேதி சொல்லுமாஆஆஆ
பக்கம் வருமா என்னை தொடுமா.. என்னைத்தொட்டுவிட்டாஆஆ இனி எப்பவுமே
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்//

பாலுஜியின் குரலில் கேட்டால் இந்த கோடை வெயிலில் மனசு ஐஸ்க்ரீமாய் உருகவைக்குது அதுவும் தென்றல் வருமா சேதி சொல்லும்ம்மாஆஆஆ // ஆஹா ஆஹா சூப்பர்ப் எத்த்னை ஐஸ்க்ரீம் சாப்பிட்டாலும் திகட்டாத சுவை போல இனிக்குது..

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

மேலும், இந்த பாடலை சென்னையில் உள்ள பாலுஜியின் தீவிர ரசிகைகளான திருமதி. சவும்யா, திருமதி. மதுமிதா, செல்வி. ப்ரியா அவர்களின் விருப்பபாடலாக வழங்குகிறேன். சூரியன் எப்.எம்ல் ஆர்.ஜே வாக பணிபுரியும் திரு. ஸ்ரீனிவாஸ் இவர்கள் மூன்று பெயரையும் ஒலிப்பரப்பினார் திரு. ஸ்ரினிவாஸ் பட்டாசு போல் படப்படபாக பேசினாலும் கேட்க மிகவும் வித்தியாசமாக இருந்தது. அவர் பேசும் அவசரத்தில் மதுமிதா என்ற பெயரை மாரிமுத்து தவறாக சொல்லிவிட்டார் (ஸ்ரீரினிவாஸ் அண்னே இதெல்லாம் சகஜம்ங்கண்ணே) . அவ்வப்போது என் நண்பர்கள் மற்றும் பாலுஜி ரசிகர்களுக்காக இப்படி நான் பாலுஜி பாடிய ஏதாவது பாடலை கேட்பதுண்டு. அப்படி நான் கேட்ட பாடலை அவர் ஒலிபரப்பவில்லையானாலும் திரு. ஸ்ரீனிவாஸ்க்கும் சேர்த்து இந்த பாடலை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இவர்களூக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்..

படம்: காலமெல்லாம் காத்திருப்பேன்
பாடியவர்: எஸ்.பி.பி
நடிகர்: விஜய்
இசை: தேவா
வருடம்:1998

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget Track details eSnips Social DNA

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்
மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே
நெற்றி பொட்ட மட்டும் வச்சி
தங்கநகை இல்லாமலே
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே
செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா
சொந்தம் பந்தமே அன்புதானம்மா
அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து
நீ என்னைக்கட்டி போட்டிருக்கே கண்ணுக்குள்ளே
மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவிய்யாஆஆஆஆ
செம்பருத்தி பூவப்போலே
சின்னச்சேலை நூலைப்போலே
சின்னப்பொன்னு என்ன சுத்தி
வந்து போவிய்யாஆஆஆஆ

தென்றல் வருமா சேதி சொல்லுமாஆஆஆ
பக்கம் வருமா என்னை தொடுமா
என்னைத்தொட்டுவிட்டாஆஆ இனி எப்பவுமே
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்
அந்த வானத்துக்கு ஒரு வென்னிலவு
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்

மணிமேகலையே மணியாகலையே
நீ தூக்கத்தை விடவேணும்
மணமாகலையே மணவேதனையே
நீ தீர்த்திட வரவேணும்

Advertisements
பிரிவுகள்:Balu, Deva, Vijay
 1. 7:26 முப இல் மே 24, 2008

  Anna,This is my favourite song. In 1998 i purchased 2 sets of cassettes of SPB tamil songs & this was the first song of Guruji which i listened & loved.Can u send me the lyric in english?? This is really a classic song & i will love to sing it with its lyric.thnx again,zakaas4u

 2. 4:12 முப இல் மே 25, 2008

  namma balu sir piythu uthariya (aanal neengal sonnathu pol prabalam adaiyaatha)pada paadalgalil intha padamum ondru.nilladi endrathu ul manathu – eppothum inikkum sugamaana melody anjaanumber bus sil eri and pachakkodi – jolly numberssuthuthadi bambaratha pola – a folk song for karanand this manimegalai -a touch of pathos…5 paadalkalume arumaiyaanavai.krishnan

 3. 5:07 முப இல் மே 25, 2008

  Hai VikasSure. I will send to you later.

 4. 3:18 முப இல் மே 26, 2008

  வாங்க எஸ்.பி.பி ரசிகன் கிருஷ்னன் சார்,நீங்க சொன்ன மாதிரி பிரபலமாகாத நிறைய பாடல்கள் தமிழ் மொழியிலேயே அதிகம் இருக்கின்றன. கன்னடம், தெலுங்கில் கேட்கவேண்டாம் குமிஞ்சி கிடக்கும். நீங்க குறிப்பிடபடி அஞ்சாம் நெம்பர் பாடல் ஏற்கெனவே இந்த தளத்தில் போட்டுட்டேன்னு நினைக்கிறேன். அடிக்கடி வருகை தந்து உற்சாகம் தருவதற்க்கு மிக்க நன்றி.

 5. 8:45 முப இல் ஜூன் 7, 2008

  01. மணிமேகலை மணியாகலை (யே வராது) என நினைக்கிறேன்.02. பாடலை எழுதியது ஆர். சுந்தரராஜனாக இருக்கலாம். அவர்தான் இயக்குநர். இப்படி நிரப்பப்பட்ட வரிகளையெல்லாம் ‘நன்றாக எழுதியிருக்கிறார்’ என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் அதிகம்.03. இந்தப் பாடலை(யெல்லாம்) ரசிப்பதன்மூலம் உங்கள் இளகிய குழந்தை நெஞ்சு நிஜமாகவே புரிந்தது. வாழ்க. 🙂

 6. 8:45 முப இல் ஜூன் 7, 2008

  01. மணிமேகலை மணியாகலை (யே வராது) என நினைக்கிறேன்.02. பாடலை எழுதியது ஆர். சுந்தரராஜனாக இருக்கலாம். அவர்தான் இயக்குநர். இப்படி நிரப்பப்பட்ட வரிகளையெல்லாம் ‘நன்றாக எழுதியிருக்கிறார்’ என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் அதிகம்.03. இந்தப் பாடலை(யெல்லாம்) ரசிப்பதன்மூலம் உங்கள் இளகிய குழந்தை நெஞ்சு நிஜமாகவே புரிந்தது. வாழ்க. 🙂

 7. 8:27 முப இல் நவம்பர் 16, 2009

  Dear Ravi Sir,What a melody song from our SPB for Vijay.Thank you.Best regards….Kannan9739020131subhikanna@yahoo.co.in

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: