இல்லம் > Balu > 726 பாலுஜியுடன் ஐந்து மணிநேர பரவசம்

726 பாலுஜியுடன் ஐந்து மணிநேர பரவசம்

ரிம்ஜிம், ரிம்ஜிம் ஹைத்ராபாத் சந்திப்பு அழைப்பிதழ்.

http://res1.esnips.com/escentral/slideshow/folderSlideShow.swf

பாலுஜியுடன் ஐந்து மணிநேர பரவசம் >> சந்திப்பில் எடுக்கப்பட்ட சில படங்களின் தொகுப்பு.

அன்பு உள்ளங்களே…

வணக்கம். 6ஆம் தேதி வெள்ளியன்று கோவையில் பாலுஜியின் ஓர் அற்புதமான இன்னிசை நிகழ்ச்சி “நினைத்தாலே இனிக்கும்” என்ற பெயரில் அமர்க்களமாக நடந்தது. அன்று காலை முதலே எனது கோவை பாலுஜி ரசிகர்கள் சிலபேர் பாலுஜியை சந்திக்க வேண்டும் என்ற ஆவலை எனக்கு தெரியப்படுத்திய போது பார்துடலாம் கவலப்படாதீர்கள் என்ற நான் நம்பிக்கையை ஏற்படுத்தினேன். அவர்களின் அதிர்ஷ்டமோ அல்லது என் போதாத காலமோ தெரியவில்லை. அன்று பாலுஜி வந்த விமானம் 2 மணி நேரம் தாமதமாக வந்து
சேர்ந்தது அது மட்டுமல்லாமல் சில தவிர்க்க முடியாத காரணத்தால் பாலுஜியை சந்திக்க முடியவில்லை ஒரு விஐபியை கடத்தி செல்லுவது போல் அவரை கடத்தி ஓர் விலாசம் தெரியாத ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்க வைத்தார்கள் விழாவை ஏற்பாடு செய்தவர்கள். இந்த குழப்பத்தினால் சரியான தகவல்கள் எனக்கு கிடைக்காததால். ஆவலுடன் காத்திருந்த அன்பர்களின் ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் மிகவும் வருத்தப்பட்டேன். இருந்தாலும் அன்பர்கள் அனைவரும் இசைநிகழ்ச்சியை கண்டு ரசித்து
மிகவும் ஆனந்தப்பட்டார்கள். அந்த ஆனந்தமும் எனக்கு கிட்டவில்லை. ஏனென்றால், 8 ஆம் தேதி ஞாயிறு அன்று பாலுஜியின் ரசிகர்களின் சாரிட்டி பவுண்டேசன் சார்பாக வருடாந்திர சந்திப்பு ஹைத்ராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

அந்த சந்திப்பில் கலந்து கொண்ட என் சந்தோசத்தையும், அனுபவத்தையும் உங்களூடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கின்றேன்.

பாலுஜியுடன் திரு.ஜி.ராமகிருஷ்னா ராவ் வீட்டிற்க்கு வருகை தந்த போது எடுத்த படம்.

முதலில், இந்த நிகழ்ச்சியை மிகவும் அற்புதமாக நடத்தி முடித்து கொடுத்த ஹைதராபாத் திரு. ஜி.ஆர்.ராமகிருஷ்னா அவர்களூக்கும் (கையில் எந்தவித குறிப்பும் இல்லாமலும் மிகச்சரளமாக பேசி திரு.ஜி.ஆர்.கே அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது கேட்டு அனைவரும் பாராட்டினர்), திரு. சைதன்யா அவர்களூக்கும் மற்றும் திருமதி. உஷா மற்றும் அனைத்து தெலுங்கு பாலுஜி ரசிகர்களூக்கும் கோவை ரசிகர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

8 ஆம் தேதி 7.45 மணிக்கு அதிகாலையில் சென்னையில் இருந்து ஒரு ரசிகர் கூட்டமே ரயிலில் வந்து இறங்கியவுடன் ஓரு பரபரப்பு எல்லோரையும் தொற்றிக்கொண்டது. எல்லோரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உற்சாகத்துடன் தயார் ஆனார்கள்.

8.30 மணீக்கு வந்த 30 பேர் குழுவுடன் ஒரு ட்ரவாலர் டெம்போவில் ஆதாரானா என்ற ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நோக்கி பயணமாகினோம். பாலுஜி அங்கே நேரில் வருவதாக தகவல். ஆகையால் அன்பர்கள் அனைவரும் ஒரு வித உற்சாகமான
மகிழ்ச்சி அவர்களின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. 9.30 மணியளவில் இல்லத்திற்க்கு சென்று அடைந்தோம் சரியாக 9.45 மணிக்கு பாலுஜி தன் ஹைத்ராபாத் நண்பர்களூடன் காரில் வந்து அட்டகாசமாக இறங்கினார். அவரை இல்லத்தின் நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். மேலும், இல்லத்தின் சிறுவர்கள், அனைவரும் பூங்கொத்து வழங்கியும் மலர்கள் தூவியும் அவரை வரவேற்றது கண்டு அனைவரும் பாலுஜி நெகிழ்ந்து போனார்கள் அவர்கள் கொடுத்த பூங்கொத்தை அன்புடன் வாங்கிகொண்ட பாலுஜி அதை என் நண்பர் திரு. சேஷாத்திரியுடன் கொடுத்து பத்திரமாக கையில் வையுங்கள் ஒரு பூகூட கீழே விழக்கூடாது,
கைதவறியும் கீழே போட்டு விடாதீர்கள் என்று குறிப்பாக சொன்னது என் மனதில் இன்னும் ஒலித்துகொண்டே இருக்கிறது. திரு. சேஷாத்திரி அவர்கள் பாலுஜி நிகழ்ச்சியை பார்த்ததை விட பூங்கொத்து எங்கே கீழே விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் கவனமாக சற்று தூக்கியே பிடித்து வைத்துக்கொண்டு இருந்ததை நான் பல தடவை காண நேர்ந்தது.

உள்ளே நுழைந்ததும், சிறுவர்களை பார்த்து எடுத்ததுவுடன் சினிமா எல்லோரும் பார்ப்பீர்களா என்றார். அதற்கு சிறுவர்கள் ஆமாம் என்று தலையசைக்க வேண்டாம் அதிகம் பார்க்காதீர்கள் என்றதும். அனைவரும் சிரித்து விட்டார்கள். தொடர்ந்து நிர்வாகிகளூடன் பேசிக்கொண்டு இருந்த பாலுஜி விவரங்களை கேட்டு அறிந்துகொண்டார். நிர்வாகிகளூம் விவரமாக வந்தவர்களூக்கு விளக்கினார். மேலும், ஆதரவற்ற இல்லத்திற்க்கு
தேவையான பொருட்களான மிக்ஸி, க்ரைண்டர், ட்யூப் லைட், மற்றும் பல பொருட்கள் சாரிட்டி சார்பாக தன் கையால் வழங்கினார். அத்துடன் சிறுவர்களின் நடனம், பாட்டு நிகழ்ச்சியை மிகவும் ஆர்வத்துடன் ரசித்து மகிழ்ந்தார். நிர்வாகிகளூடனும், சிறுவர்களூடன் புகைப்படங்கள் எடுத்துகொண்டு அவர்களீன் உற்சாகத்தில் தானும் ஒரு குழந்தை சேர்ந்து போல் மகிழ்ந்தார். குறிப்பாக அவர் சிறுவர்கள் அனைவரிடமும் விடைப்பெற்று செல்லும் போது நான் இல்லத்தில் இருந்தவர்கள் முகத்தை பார்த்தேன் அங்கு இருந்த ஒவ்வோரின் முகத்திலும் இனம் புரியாத மகிழ்ச்சி தாண்டவாடியது கண்டு எங்களுக்கும் ஆனந்தம் தான். சும்மாவாகவா சொன்னார்கள் நமது பெரியோர்கள் அடுத்தவருக்கு உதவி செய்து அவர்கள் சந்தோசப்படுவதை பார்க்க கண் கோடி வேண்டும் என்று. அந்த ஆனந்தம் எங்கும் கிடைக்காது என்பது உறுதி. பின் அனைவரும் வேனிலும் கிளம்பினோம். கிளம்பும் நேரத்தில் இல்லத்தில் இருந்த கல்லூரியில் படிக்கும் மானவர்களை 4 பேரை நிர்வாகிகள் அறிமுகப்படுத்தினார்கள்
அவர்கள் படிப்பை விசாரித்த பாலுஜி எல்லோரும் கல்லூரியில் நன்கு படிப்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இவர்கள் போல் சிறுவர்களூம் நன்றாக படிக்க வேண்டும் மீண்டும் மற்றவர்களை கேட்டுக்கொண்டார். நானும், திரு. சேஷாத்திரி மற்றும் திரு. ராமகிருஷ்னா அவரின் காரில் பாலுஜியுடன் ரசிகர்கள் சந்திப்பு நடக்கும் ஹோட்டலுக்கு கிளம்பினோம்.

ரசிகர்களை சந்திக்கும் இடத்திற்க்கு நாங்கள் செல்வதற்க்கு முன்னமே பாலுஜி தன் நண்பர்க்ளுடன் காரில் சிட்டாக பறந்து சென்று விட்டார். பின்னரே எங்கள் கார் சென்றது. விழா நடைபெறுவதற்க்கு முன்னமே பாலுஜியை சுற்றி சின்ன ஒரு கூட்டம் அனைவருக்கும்
வரவேற்பு தேனீர் வழங்கப்பட்டது. பாலுஜியும் தன் நண்பர்களூடனும் ரசிகர்களூடன் உரையாடிக்கொண்டு தேனீர் அருந்தினார். தொடர்ந்து வருபவர்களிடம் விழாவை ஏற்பாடு செய்த சென்னை ரசிகர்க்ள் சாரிட்டிகாக உள்ளே நுழையும் ரசிகர்களிடன் கண்களில் விளக்கெண்ணெய் விட்டு ஒவ்வொருத்தரையும் விடாது உறுப்பினர் கட்டணம் வசூல் செய்து கொண்டுஇருப்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

சரியாக காலை 10.45 மணியளவில் விழா துவங்கப்பட்டது. முதலில் சென்னையில் இருந்து வந்த பாலுஜியின் தீவிர ரசிகர் திரு. சதீஸ் அவர்கள் இறைவணக்கம்
பாடலை பாடி எல்லோரையும் அசத்தியது மட்டுமல்லாமல் பாலுஜி அவரை கட்டிப்பிடித்து பாராட்டையும் வழங்கினார்.

பாலுஜிக்கு திரு. ராமகிருஷ்னா அவர்களீன் குழந்தைகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள். அதன் தொடர்ச்சியாக திரு. ராமாகிருஷ்னா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்கள் ஒவ்வொருவரும் தனது சுயமாக அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். ஒவ்வொருவரின் அறிமுகம் முடிந்தவுடன் பாலுஜி சாரிட்டியுடன் பேசியவரின் தொடர்ப்பை விவரித்து நினைவில் கொண்டு பாராட்டியது கேட்டு ஒவ்வொருவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் ரேகைகள் விரிந்தது. மகிழ்ச்சியின் உற்சத்திற்க்கே சென்றார்கள் என்றால் மிகையாகாது. (நானும் தான்).

அதை தொடர்ந்து ஒவ்வொருவருடனும் பாலுஜி புகைப்படம் எடுத்துக்கொண்டது மறக்க முடியாத ஒன்று. இந்த நிகழ்ச்சியில் எனக்கு சிறிது பொறாமையும் கூட என்று சொல்லாம். ஏனென்றால் சென்ற வருடம் 2008 இதே மாதம் பிப்ரவரி 17ஆம் தேதி இது போல் ரசிகர் சந்திப்பிலும் ரசிகர்களூடன் புகைப்பட நிகழ்ச்சியில் கூட்டம் அதிகம் காரணத்தினாலும் நேரமின்மை காரணத்தினாலும் மேலும் பாலுஜியின் உடல் நிலை சரியில்லாத
காரணத்தினாலும் 4 பேர் கொண்ட குழுவாக தான் புகைப்படம் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது ஹைத்ராபாதில் எடுத்தது போல் சவுகரியமாகவும் பாலுஜி உரையாடவும் பேச முடியவில்லை. கோவையில் கலந்து கொண்ட புதிய ரசிகர்கள் தனியாக நின்று புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்கள். நான் அவர்களை, பாலுஜி எங்கே போகப்போகிறார் அடுத்த தடவை வரும்போது நிறைய பேசாலாம் என்று சமாதானபடுத்த வேண்டி இருந்தது.

தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா, தெலுங்கு நடிகர் திரு. வெங்கடேஷ், திருமதி சைலஜா, திருமதி வசந்தா, மற்றும் பாடகர் திரு. மனோ, வீடியோ பேட்டி ஒளிப்பரப்பப்பட்டது அதை கண்டு அனைவரும் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார்கள்.

பிறகு ரசிகர்களீடம் கேள்வி கேட்கும் நேரம், ஒவ்வொருவரும் வித்தியாசமான கேள்விகள் கேட்டார்கள். இந்த சந்திப்பில் சில கேள்விகளே கேட்கப்பட்டாலும். வழக்கம் போல் பாலுஜி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் தரும் போது தன் இசை அனுபவங்களை விவரமாக விவரித்து
சொன்னது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. கேள்வி கேட்டவர்கள் அனைவரும் தன் கேள்விக்கு அற்புதமான தகவல்கள் கிடைத்தது கேட்டு மகிழ்ச்சியில் திண்டாடித்தான் போனார்கள். ரசிகர்கள் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தமிழ், தெலுங்கு படப்பாடல்களை பாடி எல்லோரையும் அசர வைத்தார் அருகில் இருந்த கேட்டு ரசித்த என் கால்கள் பூமியில் நிற்காது பறப்பதை போன்ற உணர்வை அடைந்தேன்.
விழாவில் பாக்கெட் காலண்டர் பெற்றுக்கொள்ள தவறியவர்கள் மேலே உள்ளவற்றை தரவிறக்கம் செய்து தங்களின் இதயத்துக்கு அருகில் வைத்துக்கொள்ளலாம்.

பாலுஜிக்கு ரசிகர்கள் சார்பாக டைரி நினைவு பரிசும், கலந்து கொண்ட அனைவரையின் கையொப்பமிட்ட வாழ்த்து அட்டையும் வழங்கப்பட்டது. கோவை ரசிகர்கள் சார்பாக பாலுஜியின் படத்துடன் பாக்கெட் காலெண்டர் அட்டை வழங்கப்பட்டது. விழா அழைப்பிதழ் மற்றும் கோவை ரசிகர்கள் பாக்கெட் காலண்டர் வடிவமைத்த திரு. விகாஸ் காம்ளே, மும்பை அவர்களுக்கு கோவை ரசிகர்கள் சார்பாக நன்றி.

இந்த சந்திப்பில் பாலுஜியின் நெருங்கிய நண்பர்கள் திரு. முரளீ, திரு. ஷிவ்ராம், மற்றும் சுப்பாராவ் ஆகியோரின் நட்பு கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது.

சந்திப்பை தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. பாலுஜியும் அவரது நன்பர்களூம் மதிய உணவு அருந்தியது அனைவருக்கும் கிடைத்தற்கரியாத வாய்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதும் ராமகிருஷ்னா அவர்களூம் மற்ற நண்பர்களூம் நானும் உட்பட அவரை சாப்பிட விடாமல் பேசிக்கொண்டே இருந்தது அன்பர்களின் ஆர்வத்தை காணமுடிந்தது. அவரும் சளைக்காமல் பதில் தந்தது எனக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக இருந்தது. தனது வேளை பளூவின் இடையிலும் பாலுஜி அவர்கள் 9.45 மணி முதல் 2.45 மணிவரை கிட்டத்தட்ட
5 மணி நேரம் கலந்துகொண்டது இப்போது நினைத்தாலும். ஒவ்வொருவரின் ரசிகர்களீன் புருவங்களூம் வில்லாக ஆச்சரியத்துடன் உயரும். அது மட்டுமல்லாமல்
கலந்து கொண்ட ஒவ்வொரு ரசிகரும் பாலுஜியின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டார்கள் என்று சொன்னால் மிகையாகாது. மொத்தத்தில் இந்த ஹைத்ராபாத் பாலுஜியின் சந்திப்பு பரவசமான சந்திப்பாக அனைவருக்கும் இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

இந்த முறை பல ஆந்திர ரசிகர்கள் சாரிட்டியில் சேர்ந்திருக்கிறார்கள் என்று வசூல் வேட்டையில் அமர்ந்திருந்த யாகூ குழுவின் மாடெரட்டர் திரு. தாசரதி சார் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததும் நானும் அவர் மகிழ்ச்சியடைந்தேன். அதற்காக தானே கோவை, சென்னை பாலுஜி ரசிகர்கள் இந்த விழாவை ஏற்பாடு செய்து தனது வேலை பளூவின் இடையிலும் நேரத்தை வழங்கி பாலுஜி கலந்து கொள்கிறார். இந்த பதிவை படித்தாவது அடுத்த வருடம் நடக்கு விழாவிலும் இன்னும் அதிக ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசனில் சேர்ந்து கலந்து கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். இதுவரை பொறுமையுடன் தங்களின் நேரத்தை ஒதுக்கி படித்ததற்க்கு மிக்க நன்றி.

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

ஹைத்ராபாத் சென்று சுற்றித்தான் பார்க்கமுடியவில்லை அதனாலென்ன பாலுஜி பல வருடங்களூக்கு முன்னே இதோ இந்த தெலுங்க்கு பாடலின் மூலம் சுற்றி காண்பித்துவிட்டாரே அதையும் கேட்டு விடுங்கள். அத்துடன் உங்கள் இனிமையான உணர்வுகளை ஒரு வரியிலும் எழுதுங்கள்.

Movie: Mattilo Manikayam
Singer: Dr.SPB

rimjim rimjim hyderabad
rikshavaala jindabad
moodu chakramulu gira gira thirigithe
motorukaaru baladuru
rimjim rimjim hyderabad
rikshavaala jindabaad

atu chusthe chariminaru
itu chusthe jumma masidu
atu chusthe chariminaru
itu chusthe jumma masidu

aavanka assembili haalu
eevanka jubilee haalu
thala thala merise ye ye ye ye
thala thala merise hussainu saagaru
daatithe secunderabadu

rimjim rimjim hyderabad
rikshavaala jindabad

oka thalapai roomi topi
oka thalapai gandhi topi
oka thalapai roomi topi
oka thalapai ganthi topi

chaabayini antaadokadu
yemoyani antaadokadu
mathaalu baashalu veraynaa
mathaalu baashalu veraynaa
manam antha bhaayi bhaayi

rimjim rimjim hyderabad
rikshavaala jindabad

unnavaadiki thinte aragadu
lenivadiki thinde dorakadu

unnavdiki thinte aragadu
lenivadiki thinde dorakadu
parupulunna pattadu nidra
karakkunelanulo gurakalu vinara
hecchu thaggulu tholige roju
hecchu thaggulu tholige roju
eppudu vasthundo yemu

rimjim rimjim hyderabad
rikshavaala jindabad
moodu chakramulu gira gira thirigithe
motorukaaru balaatduru
rimjim rimjim hyderabad
rikshavaala jindabad

la la la la la la la laaaaaala
la la la la la la la laaaaaala
la la la la la la la laaaaaala

http://res1.esnips.com/escentral/slideshow/folderSlideShow.swf

Advertisements
பிரிவுகள்:Balu
 1. 1:57 பிப இல் பிப்ரவரி 13, 2009

  Ravee,subbiah sir pathivula sonnathuthaan ungalukkum – ‘romba vayitherichala irukku’ :-)))vazhthukal.

 2. 3:50 பிப இல் பிப்ரவரி 13, 2009

  ஹி… ஹி.. சுந்தர் கவலை படாதீங்க உங்களுக்கும் காலம் வரும்.

 3. 5:55 பிப இல் பிப்ரவரி 13, 2009

  கோவை ரவி, உங்களுக்கே உரிய மிகுந்த அபிமானத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அல்லாமல், அதை எழுத்திலும் ஏற்றிக் காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்நன்றிஅடுத்தமுறை ஒரு நிகழ்ச்சிக்கு, வற்றாத இருப்புக்காரரையும் அழைத்துச் சென்று அவர் வயிற்றைக் குளிரவைத்துவிடுங்கள் அவர் எங்கள் மாவட்டத்துக்காரர்!

 4. 3:12 முப இல் பிப்ரவரி 14, 2009

  வாங்க சுப்பையா சார்…//கோவை ரவி, உங்களுக்கே உரிய மிகுந்த அபிமானத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் அல்லாமல், அதை எழுத்திலும் ஏற்றிக் காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்நன்றி//ஐயா உங்கள் எழுத்துக்கள் விடவா நான் எழுதி விட்டேன். என மனதில் பட்டதை அப்படியே எழுதியுள்ளேன் எனக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இல்லை வாய்ப்புகளும் கிடைப்பதில்லை ஆகையால் பல இடங்களில் இலக்கண பிழைகள் இருக்கும் அதை சுந்தர் சார் படித்து சரி செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் உடனே பதிய வேண்டும் என்ற ஓர் ஆர்வத்தில் பதிவில் ஏற்றிவிட்டேன். மேலும், பாலுஜியே இந்த நிகழ்ச்சியில் என் அறிமுகத்துக்கு பிறகு சொன்னது என் மனதில் இன்னும் ஒலிக்கிறது. ரவி இணையத்தில் நானே மறந்து போன என் பாடல்களை அவருக்கே உரிய பாணியில் மிகவும் எளிதாக தருகிறார் என்று பாராட்டி உற்ச்சாக படுத்தி பாராட்டி சொன்னதும். அப்போது தான் எனக்கும் தெரியும் அவர் வேளை பளுவின் இடையிலும் என் பதிவுகளை பார்க்கிறார் என்று மிகவும் சந்தோசப்பட்டேன். ஒரு பதிவருக்கும் இது விட சிறப்பன பாராட்டு இருக்கமுடியாது. //அடுத்தமுறை ஒரு நிகழ்ச்சிக்கு, வற்றாத இருப்புக்காரரையும் அழைத்துச் சென்று அவர் வயிற்றைக் குளிரவைத்துவிடுங்கள் அவர் எங்கள் மாவட்டத்துக்காரர்!//இந்த தளம் துவக்கப்பட்ட நாளிலில் இருந்தே அவர் கப கப வென்று வயிற்றெரிச்சலுடன் தான் இருக்கிறார் ஒரு தடவை அவர் வசிக்க்கும் பாஸ்டன் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறார். பேசியிருக்கிறார். அவரை தொந்தரவு செய்யக்கூடாது ஒதுங்கி இருந்து சில வார்த்தைகள் தான் பேசியுள்ளார். மனுசன் அனாவசியத்துக்கு பயப்படறார் சார். ஒரு உண்மையான ரசிகனின் என்னங்கள் நினவுகள் என்றெவாது ஒரு நாள் நிறைவேறும். இது உண்மை சரி தானுங்களே? வருகைக்கும் உங்கள் வாழ்த்துக்களூம் நன்றி ஐயா.

 5. 6:10 முப இல் பிப்ரவரி 14, 2009

  Dear RaviSundar sonnathu mutrilum sari …Sama vaitherichala iruku , yenna ennakum serthuthaan ashok ticket book panni irunthar .Sila thavirka mudiyatha kaaranangalinaal kalanthuka mudiyama pochu .Ungal pathivu migavum arumai.SPB santhipa miss panninalum Ashok , Seshadri , venkat punniyathula ennudiya vaazhkain lakshiyamaana ” Maestro Ilayaraja ” meet panna mudinjithu . audio visual recordingkaga Maestro matrum Manova meet panninom (Mano veetla ennakum , seshadrikum mattum arumaiyana TEA , ashok miss pannitar latea vanthu)…Pathivuku nandri …Luv and Live with MusicPrasan

 6. 4:50 பிப இல் பிப்ரவரி 14, 2009

  Covai Ravee Avargale,ungal urai nadai miga arumaimiga saralamaaga nigazhchiyai pattri vivariththu vitteergalpugai padangaludan ungal padhivu miga arumainaan kurippidaadha sila thilliya vivarangalai neegal eduththu kooriyirukkirrergal.arumainanriDASARADHI

 7. 8:37 முப இல் பிப்ரவரி 16, 2009

  Dear Ravee Sir,Well done sir. You are not only a good fan, but also a good writer.Good narration.Thanks and RegardsRamanathan

 8. 11:24 முப இல் பிப்ரவரி 16, 2009

  திரு. பிரசன்னா, திரு. தாசரதி சார்,உங்களை விடவா நான் எழுதிவிட்டேன்? என் அடிமனதின் ஆழத்தில் இருந்து வந்த நினவுகள்.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: