இல்லம் > Uncategorized > பேய்களா பூதமா ஆவியா அலையுதா?

பேய்களா பூதமா ஆவியா அலையுதா?


பெரியவள் எதைச் சொன்னாலும் “அதான் எனக்குத் தெரியுமே” என்று தங்கவேலு மாதிரி உடனே பதில் சொல்வது சின்னவளின் வழக்கம். இதனாலேயே தினமும் ஒருதடவையாவது வீட்டில் அவர்களுக்கிடையில் குடுமிப்பிடி நடக்கும்.

நேற்றிரவு வழக்கம்போல ஒன்பது மணிக்கு குழந்தைகள் அவர்கள் படுக்கையறைக்குச் சென்றுவிட்டார்கள். சற்று நேரம் ஏதாவது புத்தகத்தைப் படித்துவிட்டுத் தூங்கிவிடுவார்கள். நான் செய்திகளைப் பார்த்துக்கொண்டிருக்க மனைவியும் உறங்கிவிட்டார். ஒரு பத்தரை மணி இருக்கும். பெரியவள் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வர அவள் பின்னால் வால் போலச் சின்னவள். பெரியவள் முகத்தில் பயம், இறுக்கம்.

“என்னம்மா?”

“Daddy, I’m scared”

“Scared of what?”

“பாத்ரூம் போகறதுக்காக வெளில வந்தேனா. அப்ப யாரோ ஒருத்தங்க சட்டுனு அந்தப்பக்கம் போன மாதிரி இருந்துச்சு”

இருட்டில் எதையோ பார்த்து பயந்திருக்கிறாள். நான் சிரிப்புடன் “அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எதையாச்சும் கற்பனை பண்ணிக்கிட்டு இருந்துருப்ப. அதான். போய் தூங்கு.”

“No daddy. I swear I saw something; like a shadow of a man”

“சரி. யாரா இருக்கும் அது?”

“தெரியலை. I think it was a ghost”

“பேயாவது கீயாவது. அதெல்லாம் ஒண்ணும் இல்லைம்மா. மான் எதாச்சும் போயிருக்கும்”

எங்கள் வீட்டைச் சுற்றி மான்கூட்டங்கள் இரவில் கடந்து போகும். ஜன்னல் வழியாக நிலா ஒளியில் அவற்றைப் பார்ப்பது பரவசமான அனுபவம்.

”NO NO NO. I know it was a ghost; I swear on God” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள். ஹாரிபாட்டரையோ வேறு எதாவது திகில்கதையையோ படித்துவிட்டு அப்படியே தூங்கியிருக்கவேண்டும். கனவில் பேய் வந்திருக்கும். என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.

அது வரை எங்களிருவரின் உரையாடலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த சின்னவள் (தூக்கத்தின் சாயலே இல்லாமல் கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டு) பெரியவளின் முதுகிலிருந்து வெளிப்பட்டு ஆரம்பித்தாள்.

“Daddy you know? she is right. I also saw a ghost”

இப்போது பெரியவளும் நானும் சின்னவளைப் பார்க்க அவள் தொடர்ந்தாள்.

“You know, when I got out of the school bus this afternoon, I saw a ghost, wearing a pink dress; with blonde hair; passing me on a bi-cycle” (அதாவது மதியம் மூன்று மணிக்கு – நடுத்தெருவிலாம்!)

பெரியவளின் முகத்தில் இப்போது எள்ளும் கொள்ளும் வெடிக்க மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பமாவதற்குள் இருவரையும் குண்டுக்கட்டாக அமுக்கித் தூக்கிக்கொண்டு போய் படுக்கையில் கிடத்தி லேசாக வீபூதியை நெற்றியில் பூசி – ”சாமி கூடவே இருப்பாரு – பேயெல்லாம் ஓடிடும்” – தட்டிக்கொண்டே இந்தப் பதிவின் தலைப்புப் பாடலை மெதுவாகப் பாடி, அதன் அர்த்தத்தை முடிந்தவரை எளிமைப்படுத்திக் கதைசொல்ல தூங்கி விட்டார்கள்!

கமல் பாடியது இங்கே

http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&noadvt=6&br=h&song=Peygalai&songname=Peygalai
Get Your Own Hindi Songs Player at Music Plugin

***

Advertisements
பிரிவுகள்:Uncategorized
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: