இல்லம் > Balu > 819 வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க

819 வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க

”சுவர் இல்லா சித்திரங்கள் என்று நினைக்கிறேன் அந்த படத்தில் பாலுஜி கோவையை பற்றி வெல்கம் வெல்கம் என்ற தொடங்க்கும் ஒரு பாடலை பாடியுள்ளார் அந்த பதிவு இந்த தளத்தில் கூட பதிந்துள்ளேன்.” அந்த பாடலை போலவே இந்த பாடல். வரிகளை கேட்கவே வேண்டாம் படித்தாலே மொழி மாற்றம் படத்திற்க்காக எடுக்கப்பட்ட பாடல் என்று தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள். நம்ம அபிமான பாடகர் பாலுஜி ஊட்டிக்கு வரச்சொல்றாங்க சார். ஊட்டியை பற்றி எல்லோரும் அதிகம் தெரிந்தவர்கள் தான். வெளி ஊர்களில் இருந்தும் ஏன் வெளி நாட்டிலிருந்தும் ஊட்டியை விரும்பி பார்க்க வருவார்கள். நான் கோவையில் இருந்து போக முடிவதில்லை (அதாவது ஆந்திராவிலும், திருப்பதியில் இருப்பவர்கள் அடிக்கடி திருமலைக்கு செலவதில்லை அதுபோல நண்பர்களூம் எனக்கு இருக்கிறார்கள் அதுபோலதான்) ஓரிரு தடவைதான் சென்றுள்ளேன் மல்ர் காட்சி சீசன்களில் மனுசன் நடக்க கூட முடியாது மலரை பார்க்க செல்கிறார்களோ இல்லையோ அந்த சீதோஷ்ன நிலையை அனுபவிக்கவாவது வருடம் தவறாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். சரி விசயத்துக்கு வருகிறேன் இந்த பாடலை எப்பவோ கேட்ட நினைவு ஹிந்தி மெட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்று நினைக்கிறேன். கேட்டவர்களூக்கு ஹிந்தி பாடலின் மெட்டை நிச்சயம் முணுமுணுக்க வைக்கும் என்பது உண்மை. பாலுஜியின் வழக்கம் போல் மெய் மறக்கு குரலில் அவருக்கே உரிதான சில்மிஷங்கள் நிறைந்த பாடல் கேட்ட்த்தான் பாருங்களேன். அப்படியே உங்கள் உணர்வுகளையும் எழுதுங்கள் உங்கள் பின்னூட்டங்களையும் பாலுஜி பார்க்க வாய்ப்புண்டு ஏனென்றால் அவருக்கும் இந்த சுட்டியை வழக்க்ம் போல் அனுப்பிவிடுவேன். இனி அடுத்த பதிவில் பார்க்கலாம். வற்ட்ட்டாஆஆ..

இந்த பாடலிலும் என் மனதை கவர்ந்த வரிகள் //சிம்ஸ் பார்க்கும் உண்டு நீங்க ஜோடி சேர்ந்து வாங்க..இயற்கை காட்சி தாங்க உங்க மனசுக்கு இதமுங்க.. எதிர்பாரா திருப்பங்கள் வழியில் ரொம்ப உண்டு..இதைப்போல திருப்பங்கள் வாழ்வில் உண்டுங்க..இதை தாண்டி மேலேறி வந்தாதாங்க இன்பம்..அதைப்போல தடை தாண்டி வெற்றி தேடுங்க..தேசத்தில் ஏது இதைப்போல ஊரு ஹாஆ..சிங்காரத் தோட்டம் இது தானுங்க..இந்த இயற்கை கெடுத்து விடாமல்..அதை காக்கனும் நீங்கய்யா..இது செல்வரும் ஏழையும் சேர்ந்து ரசிக்கிர இடமய்யா
//

படம்: இது வயசல்ல
பாடியவர்: டாக்டர். எஸ்.பி.பி
இசை:மனோஜ்

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

வருக… வருக… வெல்கம் டூ ஊட்டி
வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழி எல்லாம் பனி தூவும் ஊர் தாங்க
மலையில் தானே அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோனி
இது துன்பத்தை தீர்க்கிற ஊரு
இது இன்பத்தை காணுங்க
இது சொர்க்கத்தில் ஆடிடும் பூமி
இதில் ஊர்வலம் செல்லுங்க

வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழி எல்லாம் பனி தூவும் ஊர் தாங்க
மலையில் தானே அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோனி

இது பொட்டானிக்கல் கார்டன்
இங்கே பொழுது போக்க வாங்க


இது தொட்ட பெட்டா சிகரம்
இதை தொட்டு பார்க்க வாங்க

அழகான மலர் காட்சி வருஷம் தோறுமுண்டு
அதைப் பார்க்க வருவாங்க மக்கள் கோடியே
படகு ஓட்டி விளையாட ஏரி இங்கே உண்டு
பல பேரு வருவாங்க சுகம் தேடியே
மாப்பிள்ளை போலே மேகங்கள் வந்து
மலை மங்கை நாண உறவாடுமே
இந்த மலைகளின் உயரத்தை போலே
எங்க மனங்களூம் பெருசுங்க
அந்த மரங்களின் நிழலைப்போலே
பிறர் வாழ்ந்திட உதவுங்க

வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழி எல்லாம் பனி தூவும் ஊர் தாங்க
மலையில் தானே அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோனி ஹாஆ

சிம்ஸ் பார்க்கும் உண்டு நீங்க ஜோடி சேர்ந்து வாங்க
இயற்கை காட்சி தாங்க உங்க மனசுக்கு இதமுங்க
எதிர்பாரா திருப்பங்கள் வழியில் ரொம்ப உண்டு
இதைப்போல திருப்பங்கள் வாழ்வில் உண்டுங்க
இதை தாண்டி மேலேறி வந்தாதாங்க இன்பம்
அதைப்போல தடை தாண்டி வெற்றி தேடுங்க
தேசத்தில் ஏது இதைப்போல ஊரு ஹாஆ
சிங்காரத் தோட்டம் இது தானுங்க
இந்த இயற்கை கெடுத்து விடாமல்
அதை காக்கனும் நீங்கய்யா
இது செல்வரும் ஏழையும் சேர்ந்து ரசிக்கிர இடமய்யா

வாங்கய்யா வாங்க ஊட்டிக்கு வாங்க
வழி எல்லாம் பனி தூவும் ஊர் தாங்க
மலையில் தானே அழகில் ராணி
மயக்கும் சிங்கார தோனி

இது துன்பத்தை தீர்க்கிற ஊரு
இது இன்பத்தை காணுங்க
இது சொர்க்கத்தில் ஆடிடும் பூமி
இதில் ஊர்வலம் செல்லுங்க

வருவோமே நாங்க.. தேங்க்யூ..
ஊட்டிக்கு தாங்க..மெனி மோர்
வாழ்வெல்லாம் வருவோமே இனி நாங்க
தட்ஸ் வெரி குட்

Advertisements
பிரிவுகள்:Balu
  1. 11:48 முப இல் ஓகஸ்ட் 21, 2009

    Mr. Ravee,Kulu Kulunnu Ootikku oru round koottittu poi vitteenga. Nandri.Superb song by Guruji.V. Gopalakrishnan,Coimbatore

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: