இல்லம் > Balu > 824 தமிழா நீ சாதிக்க பிறந்தவன் தானடா

824 தமிழா நீ சாதிக்க பிறந்தவன் தானடா

//வானம் ஒன்றுதான்… பூமி ஒன்றுதான்.. மனித ஜாதியும் ஒன்றுதான்.. உண்மை ஒன்றுதான்.. உள்ளம் ஒன்றுதான்.. உலகத நீதியும் ஒன்றுதான்.. உலகில் என்றுதான் போர்கள் ஓயுமோ.. நன்மை காண்பதும் அன்றுதான்.. எத்தனை அரசுகள் எத்தனை முரசுகள்.. எத்தனை எத்தனை யுத்தங்கள்.. கொஞ்சும் புறாக்கள் பீரங்கிக்குள் கூடுகட்டவே இடம் வேண்டும்.. போர்க்களை ஒழித்து பூமி படைப்போம்.. பூபாளம் பாட வாருங்களே
போர்க்களம் எங்கும் பூச்செடி வெய்த்து.. பூப்பரிப்போமே //

இசையன்பர்களே இந்த கவிதை நன்றாக உள்ளாதா? சென்ற சனிக்கிழமை 22.08.2009 அன்று பெங்களூரில் பாடும் நிலா பாலுஜி அன்பைப் பெற்ற ரசிகர்கள் சார்பில் நடத்தப்படும் எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிடி பவுண்டேசன் மூலமாக ஒரு அனாதை இல்லத்தில் உதவி பொருட்கள் வழங்கும் விழா காலை 7.30 மணியளவில் நடைப்பெற்றது அதில் நமது பாலுஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.பெங்களூரு நிகழ்ச்சியின் விவரங்கள் ஆங்கிலத்தில் இங்கேஇந்த நிகழ்ச்சியில் ஒரு சிறுமி மேற்கண்ட கவிதையை பாலுஜியின் முன் பாடி பாராட்டைப் பெற்றார். பாலுஜி மிகவும் ரசித்து அந்த சிறுமியை பாராட்டியது கண்டு எல்லோரும் வியந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த கவிதையை பாடி அவர்களூக்கு அனுப்ப வேண்டும் என்று பாலுஜி சொன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என் நண்பர்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

இதற்கும், இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க தோன்றுகிறது தானே. படத்தின் பெயரே சிவப்பு மழை என்று வைத்திருக்கிறார்கள். சிவப்பு மழை என்ன என்று யோசித்தால் தொடர்பு என்னவென்று ஏதோ கொஞ்சம் புரியும். படம் இன்னும் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன். பாடலை மிகவும் அதிக உற்சாகத்துடன் பாலுஜி பாடியிருக்கிறார். இது போல் பாடல்கள் வருவது அபூர்வம். அதுவும் இது போன்ற வரிகள் கேட்பது இன்னும் அபூர்வம் //தமிழன் போய் விருதுகள் பெறுவது விருதுகள் பெறுவது புதியதுமல்ல விருதெல்லாம் தமிழன் பேரில் தமிழன் பேரில் வழங்கனுமல்ல.. உலகம் பேர் சொல்லும் தமிழா உயர் மாற்றிவா.. விண்வெளியை இன்றே வென்றாடு.. வென்னிலவை பந்தாய் கொண்டாடு.. வெற்றிகொடி என்னும் உன்னோடு..ஹோஓஓஓஓஒ.ஹோஓஓஓஓஒ// என் மனதை கவர்ந்த வரிகள். நிச்சயம் உங்களூக்கும் பிடிக்கும். கேட்டு மகிழுங்கள்.

மேலும் இந்த ஒலித்தொகுப்பை எனக்கு வழங்கிய திரு. கோவை கோபாலகிருஷ்னன் அவர்களூக்கு நன்றி. புகைப்படங்கள் உதவி நன்றி இண்டியாக்ளிட்ஸ்.காம்

படம்:சிவப்பு மழை
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்கள்:சுரேஷ் ஜோசிம்,மீரா ஜாஸ்மின், விவேக்
இயக்குநர்:வி.கிருஷ்னமூர்த்தி
தயாரிப்பு:ஆண்ட்ரு ரேன்ராய்மண்ட், சுரேஷ்

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

தமிழா…. தமிழா….
தமிழா தமிழா தமிழா
நீ சாதிக்க பிறந்தவன் தானடா

தமிழா….
தமிழா தமிழா தமிழா
நீ சாதிக்க பிறந்தவன் தானடா

தமிழா தமிழா தமிழா
முதல் சரித்திரம் படைத்தவன் நீயடா

இமயத்தை வென்றாய் வென்றாய் அன்று
அகிலத்தை வெல்வாய் வெல்வாய் இன்று
இன்சொல் பாதி பக்கங்கள் உனக்கு
இன்னும் எதிர்காலம் இருக்கு

தமிழா தமிழா தமிழா
நீ சாதிக்க பிறந்தவன் தானடா

தமிழா தமிழா தமிழா
முதல் சரித்திரம் படைத்தவன் நீயடா

உலகம் தான் மாறுது மாறுது மாறுது மாறுது வேற்று திசையில்??
உலகத்தை வரவிடு வரவிடு வரவிடு வரவிடு உந்தன் திசையில்
உன்னால் முடியும் முடியும் தமிழா உலக ஆளவா

வெற்றிடத்தில் சத்தம் வராது
வெற்றி பெற்றால் தீமை தொடாது
உன்னை விட்டு புவி சுற்றாது.. ஹோஓஓஓஓஒ

தமிழன் போய் விருதுகள் பெறுவது விருதுகள் பெறுவது புதியதுமல்ல
விருதெல்லாம் தமிழன் பேரில் தமிழன் பேரில் வழங்கனுமல்ல
உலகம் பேர் சொல்லும் தமிழா உயர் மாற்றிவா
விண்வெளியை இன்றே வென்றாடு
வென்னிலவை பந்தாய் கொண்டாடு
வெற்றிகொடி என்னும் உன்னோடு..ஹோஓஓஓஓஒ.ஹோஓஓஓஓஒ

தமிழா தமிழா தமிழா
நீ சாதிக்க பிறந்தவன் தானடா
தமிழா தமிழா தமிழா
முதல் சரித்திரம் படைத்தவன் நீயடா

இமயத்தை வென்றாய் வென்றாய் அன்று அன்று அன்று
அகிலத்தை வெல்வாய் வெல்வாய் இன்று இன்று இன்று
இன்சொல் பாதி பக்கங்கள் உனக்கு
இன்னும் எதிர்காலம் இருக்கு
தமிழா தமிழா தமிழா

தமிழா தமிழா தமிழா
நீ சாதிக்க பிறந்தவன் தானடா

தமிழா தமிழா தமிழா
முதல் சரித்திரம் படைத்தவன் நீயடா

Advertisements
பிரிவுகள்:Balu
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: