இல்லம் > Uncategorized > வேட்டைக் காரன் – 2009

வேட்டைக் காரன் – 2009


அலுவல்ரீதியான சவால்களில் உறக்கம்தொலைத்த பல இரவுகளில் ஓரிரவில் தெரியாத்தனமா வேட்டைக்காரன் படத்தை – வீட்ல எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்கும்போது – பார்த்தப்ப எழுந்த கொலைவெறியை எப்படித் தீக்கறதுன்னு தெரியாம விக்கிரமாதித்தன் வேதாளம் கணக்கா அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். என்ன பண்றது? இப்படி எழுதித் தீக்க வேண்டியதுதான்.

விஜய் என்றாலே அட்டகாசமான நடனக்காரர் என்று முதலில் தோன்றும். ஆரம்பத்தில் ஏகத்துக்கு கொத்துப்புரோட்டா படங்களில் நடித்தாலும் பிற்பாடு துள்ளாத மனமும் துள்ளும் போன்ற நல்ல படங்களில் நடித்த திறமையுள்ள நடிகர் என்றுதான் படும். அவருடைய சமீபத்திய சில படங்களை சிறு சிறு காட்சிகளாக தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கிறேன். எந்தக்காட்சி எந்தப்படத்தில் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது – சொன்னாலும் பெருத்த வேறுபாடு எதுவும் கிடையாது – எல்லாம் ஒரே மாதிரியே!

வேட்டைக்காரனைப் பற்றிய அதீத விளம்பரங்களைப்பார்த்து – சன் பிக்சர்ஸ் என்ற பிற்காரணியைப் பற்றி அறிந்தேயிருந்தாலும் – துணிவே துணை என்று இந்தப் படத்தை முழுக்கப் பார்த்த்துத் தொலைத்தேன்.

ஆரம்ப அறிமுகக்காட்சியில் குதிரையில் அவர் விரைந்து ஒரு ஜீப்பை ஓவர்டேக் செய்து நிறுத்துப்போது எழும் ”வாந்திவரும் உணர்வு” படம் முடிந்து ஒரு வாரம் கழித்து இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை நீடித்துக்கொண்டேயிருக்கிறது.

ஏதோ ஒரு ரீலில் நுழைக்கப்பட்ட ஐட்டம் சாங் ஒன்று – படத்தின் நாயகி இரு துண்டு உடைகளில் வர அவருடன் விஜய் ஆடும் நடனத்தையும், பாடல் வரிகளையும் பாடப்பட்ட விதத்தையும் பார்த்தால் கேட்டால் அவருடைய ஆரம்பகால கொத்துபுரோட்டா நினைவுதான் வருகிறது.

இதற்கு மேல் இப்படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அச்சிலேற முடியாத வார்த்தைகளையெல்லாம் எடுத்தாள வேண்டியிருக்கும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்!!!

இங்கிட்டு வந்து ரொம்ப நாளாச்சேன்னுதான் இந்தப் பதிவே. ஆனாலும் போயும் போயும் இதைப்பத்தியா எழுதறதுன்னு ரொம்பவே நொந்துக்க வேண்டியிருக்கு. வருடம் இப்படி கெட்டவிதமா முடிஞ்சாலும் 2010 நல்ல விதமா தொடங்கும்னு நம்பறேன்.பாக்க நினைக்கறவங்க வருடம் முடியறதுக்குள்ள பாத்துடுங்க – அப்றம் புது வருஷத்தை இப்படியா துவங்கணும்னு புலம்ப வேண்டியிருக்காது!

புத்தாண்டு வாழ்த்துகள்!

Advertisements
பிரிவுகள்:Uncategorized
  1. 4:27 பிப இல் திசெம்பர் 29, 2009

    //பாக்க நினைக்கறவங்க வருடம் முடியறதுக்குள்ள பாத்துடுங்க – அப்றம் புது வருஷத்தை இப்படியா துவங்கணும்னு புலம்ப வேண்டியிருக்காது!//

    அவ்வளவு கொடுமையா?? கடவுள் உங்களுக்கு அமைதியை அருளட்டும்…

    🙂

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: