இல்லம் > பாலு, வாணிஜெயராம், Balu, SPB, VJ > 908 ஆடலாமா அன்னநடை பின்னலிட

908 ஆடலாமா அன்னநடை பின்னலிட

ஹா..ஹா..ஹா..சிரிப்பு சிரித்தே பேர் வாங்கினவர் பழம் பெரும் நடிகர் திரு.பி.எஸ்.வீரப்பா ஆவர்கள் அவரின் ஆஜானுபாகுவன அவரின் தோற்றமே அப்போது சிறு பிள்ளைகளூக்கு (ஹி ஹி ஹி என்னைப்போல)பயத்தை ஏற்படுத்தும் போதாதென்று “ஹா..ஹா..ஹா..சரியான போட்டி” என்ற வசனமும் அந்த சிரிப்பும் இதனாலேயே அவர் பெரும் புகழ் பெற்றார் சேர்ந்தார் போல் வசதியும் சேர்ந்தது. பணத்தை சேர்த்து எல்லோரும் போல் படத்தயாரிப்பில் ஈடுபட்டார் அவர் தயாரித்த படங்களில் இந்த படமான மங்கம்மா சபதம் (எதை வைத்து பழைய படத்தின் பெயர் வைத்தாரோ தெரியவில்லை ஏதாவது காரணம் இருக்கலாம் தற்போது படமான ஆயிரத்தில் ஒருவன் மாதிரி யாரு கண்டாங்க?). சரி விசயத்துக்கு வருகிறேன் பழைய படமும் பார்க்கவில்லை இந்த புதிய படமும் பார்க்கவில்லை நம்ம அன்பர்கள் யாராவது உபயோகமான தகவலுடன் கலாய்க்கறாங்களா என்று பார்ப்போம். அதுவரை இந்த ஆடாலாமா பாடலை கேட்டு மகிழலாம்.

பாடல்: ஆடலாமா அன்னநடை பின்னலிட
படம்:மேகத்துக்கும் தாகமுண்டு
பாடியவர்:டாக்டர்.எஸ்பிபி,வாணிஜெயராம்
மேகத்துக்கும் தாகமுண்டு
இயக்குனர் எஸ். ஜெகதீசன்
தயாரிப்பாளர் பி. எஸ். வீரப்பா
பி. எஸ். வி. பிக்சர்ஸ், பி. எஸ். ஹரிஹரன்
நடிப்பு சரத் பாபு, ரஜனி சர்மா
இசையமைப்பு எம். எஸ். விஸ்வநாதன்

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசைபொங்கும் சொந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ
வண்ண செந்தூரம் மின்னலிடும் பாவை
வந்து நின்றாலே வேறு என்ன தேவை
வண்ண செந்தூரம் மின்னலிடும் பாவை
வந்து நின்றாலே வேறு என்ன தேவை

உன்னை காணாமல் இன்று என்ன வேலை
உள்ளம் கோணாமல் வந்தது இந்த சோலை
உன்னை காணாமல் இன்று என்ன வேலை
உள்ளம் கோணாமல் வந்தது இந்த சோலை

ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசைபொங்கும் சொந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ

முள்ளென்று சொன்னாலும்
பூவென்று சொன்னாலும்
ரோஜாவின் பேரல்லவோ

கல்லென்று சொன்னாலும்
கனியென்று சொன்னாலும்
கல்யாணம் நானல்லவோ

முள்ளென்று சொன்னாலும்
பூவென்று சொன்னாலும்
ரோஜாவின் பேரல்லவோ
கல்லென்று சொன்னாலும்
கனியென்று சொன்னாலும்
கல்யாணம் நானல்லவோ

உள்ளத்தில் ஒன்றாக
சொல்லோடு ஒன்றாக
சொல்லாத பெண்ணல்லவோ

உன்பேரை அல்லாமல்
வேறெந்த பேர் மீதும்
சாயாத பெண்ணல்லவோ

ஆடலாமா அன்னநடை பின்னலிட
ஆசைபொங்கும் சொந்தமல்லவோ
பாடலாமா பள்ளியறை பாடல் ஒன்று
பாசமுள்ள பந்தமல்லவோ

ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ

குயிலென இசை கொண்டு மயிலென நடை கொண்டு
உரிமை சிறகும் கடமை மொழியும் நிறைந்தவளே
எனது மடியில் உலகம் முழுதும் மறந்தவளே
சங்கீதம் பாடுகின்றாள் என் சந்தோசம் ஆடுகின்றாள்
சங்கீதம் பாடுகின்றாள் என் சந்தோசம் ஆடுகின்றாள்
என்னோடும் வாடுகின்றாள் கண்ணாலே பேசுகின்றாள்
சந்தன மோகினி குங்கும ராகினி
மங்கள் மேகலை பொங்கிய தேவதை
ரதியும் நதியும் இவளே

வேங்கட மாயவன் வள்ளியின் வேலவன்
கண்ணகி நாயகன் மன்னவானவன்
கனவும் நினைவும் இவனே

எனக்கொரு புதுமுகம் கொத்தவள் நீயடி

நினைக்கையில் இனிக்குது மனந்தவன் காலடி

எடுக்க எடுக்க வளரும் கலைகள் உனதே
எடுக்க எடுக்க வளரும் கலைகள் உனதே

ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ

Advertisements
பிரிவுகள்:பாலு, வாணிஜெயராம், Balu, SPB, VJ
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: