இல்லம் > Balu, SJ > 972 சீரகச் சம்பா நெல்லு குத்தி

972 சீரகச் சம்பா நெல்லு குத்தி

பாடல் பதிவின் போது சில நேரங்களில் படத்தின் போஸ்டர் மற்றும் தகவல்கள் இணையத்தில் தேடித் தேடி ஓய்ந்து போய்விடுவேன் இதற்க்காகவே பல பாடல்கள் பதிவிற்க்காக காத்திருந்தன. இந்த பாடல் இன்றுதான் வரிகளை கேட்டு எழுதினேன்.படங்களும் சீக்கிரம் கிடைத்துவிட்டது. ஏற்கெனவே இதே ரேஞ்சில்கிச்சிலி சம்பா என்று ஒரு அமர்க்களமான பாடல் பதிந்திருக்கேன். அடெங்கப்பா ஒரு நடிகர் பட்டாளமே இருக்கிறதே… பாலுஜியும் ஜானகியம்மாவும் வழக்கம் போல் கலக்குறாங்கப்பா… கேட்டு மகிழுங்கள்.

படம்:கண்ணன் வருவான்
பாடகர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, டாக்டர்.எஸ்.ஜானகியம்மா
நடிகர்கள்:கார்த்திக்,கவுண்டமணி,மந்த்ரா,திவ்யா உன்னி,ரஞ்சித், செந்தில், மனோரமா
இயக்குநர்: சுந்தர்.சி
இசை: சிற்பி

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

சீரக சம்பா நெல்லு குத்தி
நான் சோறு சமைச்சிருக்கேன்
மாமா சோறு சமைச்சிருக்கேன்
சேலத்து மாம்பலச் சாறு எடுத்து
நான் ரசமும் வச்சிருக்கேன்
மாமா ரசமும் வச்சிருக்கேன்

ஹேய் ஊத்து தோண்டி தண்ணிய எடுத்து
வெண்ணீர் வச்சிருக்கேன்
மாமா வெண்ணீர் வச்சிருக்கேன்
பொண்ணு வாய கொப்பளிக்க
தண்ணீர் வச்சிருக்கேன்
மாமா தண்ணீர் வச்சிருக்கேன்
மாமா சாப்பிட வாறீர்களா
இல்லை தோப்புக்கு போறீர்களா

ஹாய் சீரக சம்பா நெல்லு குத்தி
நான் சோறு சமைச்சிருக்கேன்
மாமா சோறு சமைச்சிருக்கேன்
சேலத்து மாம்பலச் சாறு எடுத்து
நான் ரசமும் வச்சிருக்கேன்
மாமா ரசமும் வச்சிருக்கேன்

ஹாய் ஆத்துக்குள்ளே சேலையிள்ளே
மீனப் புடிப்போமா ஹ அந்த
தோப்புக்குள்ளே ரெண்டு பேரும் சுட்டு திண்ணுவோமா

நான் ரொம்ப நாளா சைவமடி உனக்கு தெரியுமா ம்ஹ
நீ கூப்பிட்டது ஓடிவர என்னால் முடியுமா

நான் விரிச்சு வெச்ச இலையே நீ மூடலாமா மாமா

என் ருசியை தெரிஞ்சுக்காம நீ சமைச்சு வைக்கலாமா

நான் ஆக்குனது ஆறிடலாமா … ம்ஹஹஹஹஹ

மாமா சாப்பிட வாறீர்களா
இல்லை தோப்புக்கு போறீர்களா

சீரக சம்பா நெல்லு குத்தி
நான் சோறு சமைச்சிருக்கேன்
மாமா சோறு சமைச்சிருக்கேன்
சேலத்து மாம்பலச் சாறு எடுத்து
நான் ரசமும் வச்சிருக்கேன்
மாமா ரசமும் வச்சிருக்கேன்

உன் பத்து விரல் நகத்திலையும் விஷேசம் இருக்கா
உன் கைப்பட்டா தண்ணி இனிக்குதடி பாயாசங்கணக்கா

நீ உச்சிகுள்ளே பேசறது ??? ருசிச்சேன்
ஐயோ..
என் மனசுக்குள்ளே இப்போ வேற என்ன பன்னியிருக்க

நீ இலையை போடும் போது அதில் வளையல் விழுந்ததென்ன

அது கையை மீறும் ஆசை அது சொல்லி என்ன பன்ன

ஒரு பசி முடிஞ்சா பசி பிறக்கும் ம்ம்ம்ம்ம்ஹம்ம்ம்

சாப்பிட வரட்டமா
நடு சாமத்தில் வரட்டுமா

சீரக சம்பா நெல்லு குத்தி
நான் சோறு சமைச்சிருக்கேன்
மாமா சோறு சமைச்சிருக்கேன்

சிரிச்சு மயக்கும் சிவந்த உதட்டில்
தேனுக்கு காத்திருக்கேன்
மானே தேனுக்கு காத்திருக்கேன்

ஹேய் ஊத்து தோண்டி தண்ணிய எடுத்து
வெண்ணீர் வச்சிருக்கேன்
மாமா வெண்ணீர் வச்சிருக்கேன்

ஹோய் உனக்குள் குதிச்சு உடம்பு நனைக்க
உசிரு காத்திருக்கு கண்ணே உசிரு காத்திருக்கு

மாமா சாப்பிட வாறீர்களா
இல்லை தோப்புக்கு போறீர்களா

சாப்பிட வரட்டமா
நடு சாமத்தில் வரட்டுமா

Advertisements
பிரிவுகள்:Balu, SJ
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: